×

வக்பு சட்ட திருத்த மசோதா சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பாஜ அரசு: தவெக தலைவர் விஜய் அறிக்கை

சென்னை: தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ வக்பு சட்ட திருத்தம் இந்திய இஸ்லாமியர்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது. கையில் ஆட்சி இருக்கிறது என்பதற்காக கூட்டணி கட்சிகளின் துணையோடு சமூக நல்லிணக்கத்தை பா.ஜ. அரசு சீர்குலைக்கிறது. நம் நாட்டின் சட்டம் மற்றும் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுகிறது ஒன்றிய அரசு.

இஸ்லாமியர்களின் நலன் காக்கவே இந்த சட்ட திருத்தம் என பொய் வாதம் செய்கிறது பா.ஜ. அப்படி ஒன்றிய அரசு சொல்வதுபோல் இந்த சட்டம் இஸ்லாமியர்களின் நலன் காக்கிறது என்றால் அதை தாக்கல் செய்த குழுவில் ஏன் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை? தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மாநில சட்டசபையில் இந்த சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் தவெகவும் பங்கேற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வக்பு சட்ட திருத்த மசோதா சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பாஜ அரசு: தவெக தலைவர் விஜய் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Bajaj ,Government ,Daveka Chairman ,Vijay ,Chennai ,Islamists ,Dweka ,J. ,Bajaj Government ,Dinakaran ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்