×

‘ஆடுகள் நடமாடும் வங்கி, ஏடிஎம்’

சட்டப்பேரவையில் நேற்று கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்து பேசியதாவது: கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவது எது என்று சொன்னால் கால்நடை துறைதான் என்று உறுதியாக சொல்லமுடியும். சாதாரண மக்களுடைய பொருளாதாரத்தை உயர்த்துவது, கிராமத்தில் எது என்று சொன்னால், கால்நடை தான்.

திடீரென்று அவர்களுக்கு குடும்ப செலவிற்கு பணம் வேண்டுமென்றால், அது விடுமுறை நாட்களாக இருந்தாலும் சரி, எந்த வகையிலும் அவர்கள் உடனடியாக 5 ஆடுகளை விற்று பணம் பெற முடியும். அந்த வகையில் ஆடுகளைப்பற்றி சொல்லவேண்டுமென்று சொன்னால், அது ஒரு நடமாடும் வங்கியாகவும், கிராமத்தினுடைய ஏடிஎம் ஆகவும் திகழ்வது எது என்று சொன்னால், இந்த ஆடுகள் தான்.

The post ‘ஆடுகள் நடமாடும் வங்கி, ஏடிஎம்’ appeared first on Dinakaran.

Tags : Goats ,Animal Husbandry, Fisheries and Fishermen Welfare Department ,Assembly ,Fisheries Minister ,Anitha R. Radhakrishnan ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...