×

தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு புதிய ஆணையர் நியமனம்: ஆளுநர் பதவிப் பிரமாணம்

சென்னை: தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு புதிய ஆணையரை நியமித்து தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு தகவல் ஆணையம் சென்னையில் உள்ள நந்தனத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி 2வது மேல்முறையீடு மற்றும் புகாரை விசாரிக்கும் அமைப்பாக உள்ளது. அதோடு இந்த ஆணையத்தின் மூலம், பிறப்பிக்கப்பட்ட ஆணையை நிறைவேற்றப்படாதது குறித்து விசாரிக்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 மாநில தகவல் ஆணையர்களைக் கொண்டு தமிழ்நாடு தகவல் ஆணையம் அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் மாநில தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை 2ல் இருந்து 6ஆக உயர்த்தப்பட்டது. மாநில தகவல் ஆணையத்தில், தலைமை தகவல் ஆணையர் உள்ளிட்ட 6 ஆணையர் பதவிகள் உள்ளன. புதிதாக 2 தகவல் ஆணையர் பதவிகளை, அரசு உருவாக்கியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (மத்திய சட்டம் 22/2005) பிரிவு 15ன் துணை பிரிவு (3)ல் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநில தகவல் ஆணையராக விஜயராம் என்பவரை நியமித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னிலையில் இவர் பதவி ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு தகவல் ஆணைய மாநில தலைமை தகவல் ஆணையர் ஷகீல் அக்தர், மனிதவள மேலாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலர் சமயமூர்த்தி, ஆளுநரின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார் மாநில தகவல் ஆணையர்கள் பங்கேற்றனர்.

Tags : Tamil Nadu Information Commission ,Chennai ,Tamil Nadu ,Governor ,Rajendra Vishwanath Arlekar ,Nandanam, Chennai ,
× RELATED ரூ.1843.85 கோடியில் 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்