- வேல்முருகன்
- விஜய்
- சென்னை
- தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி
- அரும்பாக்கம், சென்னை
- டி.வி.கே
- தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி…
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: டிவிகே என்னும் ஆங்கில சுருக்கத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி பல ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளது.
ஆனால் தற்போது தமிழக வெற்றி கழகம் இதே ஆங்கில சுருக்கத்தை பயன்படுத்தி வரும் சூழலில் அதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது கன்னடத்துக்குரியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் டிவிகே என்னும் ஆங்கிலச் சுருக்கத்தை மீட்டெடுக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய உள்ளோம்.
தற்போது தமிழகத்தில் நடந்து வரும் போலீஸ் என்கவுன்டர்கள் வரவேற்கத்தக்கது. என்கவுன்டர் செய்யப்பட்ட குற்றவாளிகள் இச்சமூகத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். வட மாநிலத்திலிருந்து வேலை தேடி தமிழகத்துக்கு வருபவர்களின் மூலம்தான் அதிக அளவில் போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. ஆகையால் அவர்கலை கண்காணிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
The post விஜய் கட்சிக்கு எதிராக வழக்கு வேல்முருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.
