×

இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக நினைக்கிறது: தவாக தலைவர் எம்எல்ஏ வேல்முருகன் குற்றச்சாட்டு

சென்னை: வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா போன்ற கொடுமையான சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக நினைப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ குற்றசாட்டு வைத்துள்ளார்.
இதுகுறித்து எம்எல்ஏ வேல்முருகன் கூறுகையில், இந்தியாவில் வாழும் 32 கோடி இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களின் உணர்வை மதிக்காமல், மத்திய பாஜக அரசு நேற்று நள்ளிரவு 2 மணிக்கு வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மற்றும் இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடு, மதச்சார்பற்ற நாடு என்ற வரலாற்று பெருமை கொண்ட நாடு ஆகும்.

இந்நிலையில் சிறுபான்மையின மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல்களை தொடர்ந்து பாஜக அரசு செய்து வருகிறது. இந்திய தேசத்தின் விடுதலைக்கு தங்களது சொத்துக்களை இஸ்லாமியர்கள் அள்ளிக் கொடுத்தவர்கள் ஆவார்கள். மேலும் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியவர்கள் கிறிஸ்துவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால் பொது சிவில் சட்டம் போன்ற எண்ணற்ற கொடுமையான சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக நினைக்கிறது. இது அம்மக்களின் இளைய தலைமுறையினர் இடையே வக்கிரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தும் சூழல் இருக்கிறது. அதேபோல் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையையும் தவாக கட்சி வரவேற்கிறது. மேலும் தமிழகத்தில் காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்புக்கும் எங்களது வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தவாக தலைவர் எம்எல்ஏ வேல்முருகன் கூறினார்.

The post இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக நினைக்கிறது: தவாக தலைவர் எம்எல்ஏ வேல்முருகன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Islamists ,Dawa ,MLA ,Velmurugan ,Chennai ,Tamil Life Party ,Wakfu Board ,India ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...