×

ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த், தமன்னா, இயக்குனர் நெல்சன் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள்.

கடந்த வருடம் ஜுலை மாதம் சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகி ஹைதராபாத், கடலூர், ஜெய்சால்மர், மங்களூர், சாலக்குடி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி இப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பை கடந்த மாதத் துவக்கத்தில் வெளியிட்டார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடந்து முடிந்துவிடும். ரஜினிகாந்த் நடித்து இதற்கு முன்பு 2021 தீபாவளிக்கு வெளிவந்த ‘அண்ணாத்த’ படம் தோல்வியடைந்தது. சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘ஜெயிலர்’ வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

The post ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nelson Dilipkumar ,Rajinikanth ,Mohanlal ,Sivarajkumar ,Sunil ,Jackie Sherab ,Tamanna ,Ramya Krishnan ,Yogi Babu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என்...