×

நாகப்பட்டினத்தில் புனித ரமலான் அன்பளிப்பு வழங்கும் விழா

நாகப்பட்டினம்,ஏப்.2: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அல்-ஹலால் கல்வி அறக்கட்டளை ஆகியவை சார்பில் புனித ரமலான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நாகூரில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் மாவட்ட தலைவர் ஷம்சுதீன் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்புச் செயலாளர் சாகா மாலிம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு உலமாக்கள் நல வாரிய உறுப்பினர் ஜலால், காங்கிரஸ் கட்சி நாகப்பட்டினம் மாவட்ட துணைத்தலைவர் ராமலிங்கம், காங்கிரஸ் மாநில செயலாளர் நவுசாத், கவுன்சிலர் முகம்மதுநத்தர், தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய முன்னாள் உறுப்பினர் தமிம்அன்சாரி சாகிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு உலமாக்கள் சபை மாவட்டத் தலைவர் மௌலானா மௌலவி அஹமது மெய்தீன் சமதானி கிராஅத் ஓதினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் 400 நபர்களுக்கு மளிகை பொருட்கள், சுய தொழில் முனைவோருக்கு நான்கு சக்கர தள்ளுவண்டி, தையல் இயந்திரம், மாவு அரைவை இயந்திரம், கேஸ் சிலிண்டருடன் அடுப்பு ஆகியவற்றை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் வாழ்த்துரை வழங்கினார். திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் சாகுல்ஹமீது சாகிப், கவிஞர் நாகூர் பாரி, வக்கீல் காதர்சா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினத்தில் புனித ரமலான் அன்பளிப்பு வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Holy Ramadan donation ceremony ,Nagapattinam ,Holy Ramadan ,Nagaur ,Indian Union Muslim League ,Al-Halal Education Foundation ,Former ,President ,Shamsuddin ,Indian Union… ,Dinakaran ,
× RELATED விவசாயிகள் பயிற்சி முகாம்