மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு இன்று (ஏப். 2) முதல் ஏப். 6ம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. ஐந்து நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் இருந்து சுமார் 1,200 பிரதிநிதிகள் மற்றும் மார்க்சிஸ்ட் தலைவர்களுடன், இடதுசாரி கட்சிகளின் ெபாதுச் செயலாளர்கள், நிர்வாகிகளும் மதுரை வந்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, கேரள முதல்வர் பினராயி விஜயன், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் நேற்று மாலை மதுரை வந்தடைந்தனர். இவர்களை, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
The post மதுரையில் குவிந்த கம்யூ. தலைவர்கள் appeared first on Dinakaran.
