×

கேரளா, குஜராத், அந்தமானில் ஆழ்கடல் கனிம சுரங்கத்திற்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் ஆழ்கடல் கனிம சுரங்கங்கள் அமைக்கும் டெண்டர்களை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

ஆழ்கடல் கனிமங்களை வெட்டி எடுக்க கேரளா, குஜராத், அந்தமான் நிக்கோபர் தீவுகளின் கடல் பகுதிகளில் ஆழ்கடல் கனிம சுரங்கங்கள் அமைக்க ஒன்றிய அரசு டெண்டர் விட்டுள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மீன்வர்களின் போராட்டத்தை தொடர்ந்து, கேரள சட்டப்பேரவையிலும், ஆழ்கடல் சுரங்க அனுமதியை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் நிக்கோபரில் ஆழ்கடல் கனிம சுரங்கங்களை அனுமதிக்கும் ஒன்றிய அரசின் முடிவை இந்த கடிதத்தின் மூலம் கடுமையாக கண்டிக்கிறேன். இத்திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்படாமல் டெண்டர் விடுக்கப்பட்டிருப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த திட்டம் தொடர்பாக மீனவர்களுடன் அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. இந்த திட்டத்தால், லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறையில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். மேலும், பன்முகத்தன்மை கொண்ட கடல்வாழ் உயிரினங்களை மீளமுடியாத அளவிற்கு சேதப்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு உடனடியாக இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். ஆழ்கடல் கனிம சுரங்களுக்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post கேரளா, குஜராத், அந்தமானில் ஆழ்கடல் கனிம சுரங்கத்திற்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Andaman, Kerala, Gujarat ,Rahul Gandhi ,PM Modi ,New Delhi ,Kerala ,Gujarat ,Andaman Nicobar Islands ,Modi ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை