- முதல் அமைச்சர்
- சிங்கப்பூர்
- சென்னை
- எம்.கே. ஸ்டாலின்
- கூட்டு செயல் குழுவின் கூட்டம்
- இந்திய பாராளுமன்றம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம்’ பெற்று வரும் அகில உலக முக்கியத்துவமும் கவனமும் குறித்து சிங்கப்பூரின் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஆங்கில நாளிதழான ‘The Straits Times’ முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த, இந்திய நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடர்பாக, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக, அச்செய்தி தாளின் OPINION பகுதியில் முதல் இரண்டு பக்கங்களில், ஒரு முழு பக்க செய்தி அளவில் வெளியிட்டிருக்கிறது. முதல்வரின் இந்த மாபெரும் மாநிலங்களின் உரிமைக்காப்பு முயற்சி, அகில உலக அளவில் முக்கியத்துவம் பெறுவதோடு, உலக நாடுகள் கவனமாக உற்று நோக்கக் கூடிய ஒரு அரசியல் முன்னெடுப்பாகவும் பார்க்கப்படுவதையும் இந்த செய்தி வெளியீடு உணர்த்துகிறது.
இந்த கட்டுரையில், தென் மாநிலங்களின் துறைமுக முக்கியத்துவம், பொருளாதார சமூக வளர்ச்சி ஆகியன சிறப்பாகக் கூறப்பட்டிருக்கின்றன. 543 இடங்கள் உள்ள இந்திய நாடாளுமன்றத்தில் 130 இடங்களை மட்டுமே வைத்திருக்கும் தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இன்னும் குறைக்கப்படும் நிலைமை வருவது கொடுமை என்பைதை விட அநீதி.இப்போதிருக்கும் தெளிவில்லாத சூழல் பாதிக்கப்படும் மாநிலங்கள் மத்தியில் ஒரு சுழலும் அழுத்தத்தை, வலியை மையம் கொள்ளச் செய்திருக்கிறது என்று பட்டவர்த்தனமாகக் கூறுகிறது.
முடிவில், தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை மிகவும் ஆபத்தானது, மார்ச் 22 அன்று, மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த ‘மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்’ எளிதாகப் புறந்தள்ளி விடமுடியாத முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், மறுசீரமைப்பை ஒத்தி வைப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என்று இந்த கட்டுரை முடிகிறது.
The post தொகுதி மறுவரையறை விவகாரம்; உலக கவனத்தை இழுக்கும் முதல்வரின் நடவடிக்கை: சிங்கப்பூர் ஆங்கில நாளிதழ் பாராட்டு appeared first on Dinakaran.
