×

வக்பு சட்டத்திற்கு எதிரான தீர்மானம்; ஒன்றிய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பேட்டி

சென்னை: சட்டசபையில் வக்பு சட்டத்திற்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மீது ஒன்றிய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் கூறினார்.

இந்திய ஹஜ் அசோசியன் தலைவர் அபூபக்கர் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
2025 ஹஜ் பயணம் செய்யக் கூடிய அனைவருக்கும் 5900 ஹாஜிமார்களுக்கு தலா ரூ.25,000 என்ற வகையில் 14 கோடியே 75 லட்ச ரூபாயை எந்த முதல்வரும் அறிவிக்காததை தமிழக முதல்வர் அறிவித்ததற்கு 40 கோடி இஸ்லாமியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை நங்கநல்லூரியில் 65 கோடி மதிப்பில் ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்முறையாக சொந்தமாக ஹஜ் இல்லம் கட்ட இருப்பது முத்தாய்ப்பான செய்தி.

வக்பு வாரிய திருத்த சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது நாட்டுக்கு எடுத்துக்காட்டான விஷயம். ஒன்றிய அரசு இதுதொடர்பாக பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். ரம்ஜான் பண்டிகையின் போது தொழுகையில் கருப்புப் பட்டை அணிந்தது இஸ்லாமியர்ளின் வருத்தத்தை பதிவு செய்யும் விதத்தில் உள்ளது. இவ்வாறு கூறினார்.

The post வக்பு சட்டத்திற்கு எதிரான தீர்மானம்; ஒன்றிய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union government ,President ,Indian Haj Association ,Chennai ,Chief Minister ,Abubakar ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...