×

மதுரை அருகே என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை

மதுரை: சிந்தாமணி அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். காரில் கஞ்சா கடத்திச் சென்றபோது போலீசார் துரத்திப் பிடிக்க முயன்றபோது ரவுடி சுபாஷ் தாக்குதல் நடத்தியுள்ளார். தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார். என்கவுன்ட்டரில் உயிரிழந்த ரவுடி சுபாஷ் சந்திரபோஸின் உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது. என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post மதுரை அருகே என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Madurai ,Rowdy Subhash Chandrabose ,Chintamani ,Rowdy Subhash ,Bhoominathan ,Dinakaran ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி...