×

கவுகாத்தியில் சிஎஸ்கே.வுடன் மோதல்: எழுச்சி பெறுமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

கவுகாத்தி: 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிறு) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கிய 10வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதைத்தொடர்ந்து கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 11-வது லீக் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது. கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியை மறந்து புதிய உத்வேகத்துடன் வெற்றிபெற சென்னை அணி தீவிரம் காட்டும்.

அதேநேரத்தில் முதல் 2 போட்டிகளில் பெற்ற தோல்வியால் துவண்டு போய் இருக்கும் ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடங்க அனைத்து வகையிலும் முயற்சிக்கும். எனவே இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியதில் சிஎஸ்கே 16 போட்டிகளிலும், ராஜஸ்தான் 13 போட்டிகளிலும் வெற்றிபெற்று இருக்கின்றன. இறுதியாக நடந்த 5 போட்டிகளில் 4-ல் ராஜஸ்தான் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கவுகாத்தியில் சிஎஸ்கே.வுடன் மோதல்: எழுச்சி பெறுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? appeared first on Dinakaran.

Tags : CSK ,Rajasthan Royals ,Guwahati ,18th IPL cricket series ,Sunrisers ,Hyderabad ,Delhi Capitals ,Guwahati… ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்…