×

நித்திரவிளை அருகே கஞ்சா புகைத்த வாலிபர்கள் கைது

நித்திரவிளை, மார்ச் 29 : நித்திரவிளை எஸ்.ஐ. ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கே.ஆர்.புரம் பத்து ஏக்கர் நிலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல் சிகரெட் புகைத்து கொண்டிருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தில் இருந்து இறங்கி அருகே சென்ற போது 2 பேர் தப்பி ஓடியுள்ளனர். மீதி 2 பேரையும் போலீசார் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்திய போது, இருவரும் கஞ்சாவை சிகரெட்டில் வைத்து புகைத்ததும், பத்து கிராம் வீதம் 2 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலம் வைத்திருந்த சூசைபுரம் காலனி பகுதியை சேர்ந்த கிரீஷ் ஆண்ட்ரூஸ் (23), வள்ளவிளை சர்ச் வளாகத்தை சேர்ந்த நிகில்ராஜ் (20) ஆகியோர் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

The post நித்திரவிளை அருகே கஞ்சா புகைத்த வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : NITHIRAVILA ,S. I. King Robert ,Puram ,Nidravila ,
× RELATED விவசாயிகள் பயிற்சி முகாம்