×

விஜய் வரம்பு மீறி பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது: செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: ஒன்றிய அரசுக்கு எதிராக தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்த போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
விஜய் ஒரு கொள்கை, கோட்பாடு அந்த அடிப்படையில பேசணும். 75 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது முடி ஆட்சி. இப்போது குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. இதை போய் மன்னர் ஆட்சி, மாமன்னர் ஆட்சி அப்படி என்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எல்லோருக்கும் எல்லாம் உரிமையும் உள்ளது. ஆனால் வரம்பை மீறி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

The post விஜய் வரம்பு மீறி பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது: செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Chennai ,Union Government ,Thambaram Sanmugham Road, ,Tamil ,Nadu Congress ,President ,Sellwapperundagai ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...