- தமிழ்
- தமிழ்நாடு
- பாசிஸ்டுகள்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: கிராமப்புற பொருளாதாரத்திற்கும்-சாமானிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முதுகெலும்பாக இருந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளதை ஒரு போதும் ஏற்க முடியாது. 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உழைத்து களைத்த மக்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை நிறுத்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி. இதனை கண்டித்து தமிழ்நாடெங்கும் திமுக நடத்துகிற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போர்க்குரல் டெல்லியின் செவிகளில் விழட்டும். பாசிஸ்ட்டுகளின் இந்த ஓரவஞ்சனை தொடர்ந்தால், தமிழ்நாடு அவர்களை மீண்டும் தண்டிப்பது உறுதி. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post பாசிஸ்ட்டுகளின் ஓரவஞ்சனை தொடர்ந்தால் மீண்டும் தமிழ்நாடு தண்டிப்பது உறுதி: துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை appeared first on Dinakaran.
