சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கை: தற்போது நடைபெறும் தென்மண்டல மொத்த எல்பிஜி டிரான்ஸ்போர்ட்டர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் எல்பிஜி நுகர்வோர்களுக்கு போதுமான எல்பிஜி சிலிண்டர்களை விநியோகிப்பதாக உறுதியளித்துள்ளதோடு அவர்கள் பதற்றம் அடைய வேண்டாம். தற்போது ஓஎம்பிக்களுக்கு அவர்களது பாட்டிலிங் ஆலைகளில் மொத்த எல்பிஜி ஸ்டாக்குகள் உள்ளன.
ஆகவே விநியோகஸ்தர்கள் எப்போதும் போல சேவையைத் தொடர்வார்கள். தற்போதைய வாகன போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி அனைத்து மண்டலங்களில் உள்ள டிரான்ஸ்போர்ட்டர்களுடன் விரிவாக கலந்து பேசி முடிவு செய்யப்பட்டது. இதில் அவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பல விளக்கங்கள் வழங்கப்பட்டன. ஓஎம்சி-க்கள் பிரதான டிரான்ஸ்போர்ட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண முயன்று வருகின்றனர்.
பொறுப்புள்ள பொதுத்துறை ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களாக நாங்கள் அனைத்து நுகர்வோர்களின் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக எல்பிசி தேவையை தடையின்றி அளிப்பதில் முனைப்புடன் உள்ளோம். வாடிக்கையாளர்கள் இதுகுறித்து பதற்றம் அடையவேண்டாம். ஏனெனில், தடையற்ற எல்பிசி சப்ளையை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post எண்ணெய் நிறுவனங்கள் தகவல் ஸ்டிரைக்கால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது appeared first on Dinakaran.
