×

தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது, வளர்ந்த நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது, வளர்ந்த நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் சிஐஐ தென் இந்திய மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 2வது இடம்

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.

சென்னை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றப்படும்”

சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்ற 3-வது செயல் திட்டம் உருவாக்கி வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. பசுமை இயக்கத்துக்கு முன்னோடியாக தமிழ்நாடு விளங்குகிறது. சேலம், தூத்துக்குடி, திருச்சி, ஓசூர் போன்ற நகரங்கள் பொருளாதார வளர்ச்சி நகரங்களாக மாற்றப்பட்டுள்ளது. உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து பசுமை எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை. நீர்வளங்களை திறம்பட நிர்வகித்தல், நீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 12.11% தமிழ்நாட்டின் பங்கு உள்ளது. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது, மற்ற வளர்ந்த நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டும் என தெரிவித்தார்.

 

The post தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது, வளர்ந்த நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister MLA K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,Head ,CII South India Conference ,ITC Grand Chozha Hotel ,MLA K. Stalin ,
× RELATED கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள...