×

சிவகங்கையில் புதிய சட்டக்கல்லூரி துவங்க வாய்ப்பில்லை : அமைச்சர் ரகுபதி

சென்னை : சிவகங்கையில் அரசு சட்டக்கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என எம்.எல்.ஏ. செந்தில்நாதன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “காரைக்குடியில் புதிய சட்டக்கல்லூரி வழங்கப்பட்டு, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. எனவே சிவகங்கையில் புதிதாக துவங்க வாய்ப்பில்லை,”என்றார். மேலும் அவர், “தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் 1.75 லட்சம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக தற்காலிகமாக சட்டக்கல்லூரி தொடங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, “எனத் தெரிவித்தார்.

The post சிவகங்கையில் புதிய சட்டக்கல்லூரி துவங்க வாய்ப்பில்லை : அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Minister Ragupathi ,Chennai ,Government Law College ,M. L. A. Sendilnathan ,Law Minister ,Ragupati ,Karaikudi ,Sivakanga ,College ,Minister ,
× RELATED தொகுதி மாற்றமா? வானதி டென்ஷன்