சென்னை: சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக- பாஜ கூட்டணி தொடர்பாக எடப்பாடியார் பதில் சொல்லிவிட்டார். பாமக, பாஜக கூட்டணிக்கு வருவதாக நான் யாரிடமும் சொல்லவில்லை. எவன்கிட்ட அப்படி சொன்னேன். கூட்டணி விவகாரம் எல்லாம் நான் பேசக் கூடிய விஷயமே அல்ல, பொதுச்செயலாளர்தான் பேசனும். அதனால் நான் காலையில் அப்படி எல்லாம் கூட்டணி பற்றி சொல்லவே இல்லை. கூட்டணி பற்றி பாமக எம்எல்ஏ சதாசிவம் சொல்லி இருந்தால் அவரிடம்தான் கேட்க வேண்டும். என்கிட்ட ஏன் கேட்கனும். நான் என்ன கிறுக்கனா, அப்படி எல்லாம் சொல்லவே இல்லை. இந்தியாவின் இரும்பு மனிதர் என அமித்ஷாவை ஆர்பி உதயகுமார் சொல்லியிருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
The post நான் என்ன கிறுக்கனா அதிமுக-பாஜ கூட்டணி பற்றி நான் பேசவே இல்லை: திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம் appeared first on Dinakaran.
