×

மியாமி ஓபன் டென்னிஸ் அரைனா சபலென்கா அரை இறுதிக்கு தகுதி

மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் உலக நம்பர் ஒன் வீராங்கனை அரைனா சபலென்கா அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று பெலாரசை சேர்ந்த, உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை அரைனா சபலென்கா, சீனாவின் ஸெங் க்வின்வென் உடன் மோதினார். அநாயாசமாக ஆடிய சபலென்கா இரு செட்களையும் லாவகமாக கைப்பற்றினார். அதனால், 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று அவர் அரை இறுதிக்கு முன்னேறினார்.

* காலிறுதியில் ஜோகோவிச்
ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுப் போட்டியில் நேற்று, செர்பியாவை சேர்ந்த உலகின் 5ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரர் லோரென்ஸோ முசெட்டி உடன் மோதினார். ஆழ்ந்த அனுபவத்தால் போட்டி முழுவதும் ஆக்கிரமித்திருந்த ஜோகோவிச் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

The post மியாமி ஓபன் டென்னிஸ் அரைனா சபலென்கா அரை இறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Miami Open Tennis ,Aryna Sabalenka ,Miami ,Miami Open Tennis Women's Singles ,Miami Open Tennis Tournament ,Miami, USA.… ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்…