கோவை: கோவையில் சப்தமாக பாடல் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர், சக ஓட்டுநரால் மதுபாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த ஓட்டுநர் ரியாஸ் (36) நேற்றிரவு மதுபோதையில் அதிக சப்தத்துடன் சினிமா பாடல் கேட்டுள்ளார். பாடல் சப்தத்தை சக ஓட்டுநரான ஆறுமுகம் குறைத்ததால் ஆத்திரத்தில் மதுபாட்டிலால் ரியாஸ் தாக்கியுள்ளார். மதுபாட்டிலால் ரியாஸ் தாக்கியதில் ஓட்டுநர் ஆறுமுகம் உயிரிழந்தார். இது தொடர்பாக கோவை சுந்தராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோவையில் சப்தமாக பாடல் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர், சக ஓட்டுநரால் அடித்துக் கொலை!! appeared first on Dinakaran.
