×

செல்லூர் ராஜு கேட்டு செய்யாமல் இருக்கமாட்டார்கள்: சபாநாயகர் அப்பாவு

சென்னை: செல்லூர் ராஜு கேட்டால் எந்த அமைச்சரும் செய்ய மாட்டோம் என சொல்ல மாட்டார்கள் என சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் தாழ்ந்த நிலையில் உள்ள மின்கம்பிகளை மாற்ற பேரவையில் செல்லூர் ராஜு” கோரிக்கை விடுத்தார். மதுரை மேற்கு தொகுதியில் 218 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது, 3 புதிய துணை மின்நிலையம் அமைய உள்ளது. தாழ்ந்த நிலையில் உள்ள மின்கம்பியை மாற்ற திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என செல்லூர் ராஜு கேள்விக்கு பதில் தெரிவிக்கப்பட்டது.

The post செல்லூர் ராஜு கேட்டு செய்யாமல் இருக்கமாட்டார்கள்: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Tags : Sellur Raju ,Speaker ,Appavu ,Chennai ,Madurai West ,Madurai… ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு