×

மணிமுத்தாறு குறுக்கே ஆற்றுப்பாலம் கட்ட ஆணை

சென்னை: மணிமுத்தாறு குறுக்கே 4 மாதத்திற்குள் ஆற்றுப்பாலம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மேமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.சுதாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.11.57 கோடியில் மணிமுத்தாறு குறுக்கே ஆற்றுப்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 4 மாதங்களில் பாலம் கட்டும் பணியை தொடங்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

The post மணிமுத்தாறு குறுக்கே ஆற்றுப்பாலம் கட்ட ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Torapala ,R. ,Mamathur Village, Cuddalore District ,Sudhakar ,Chief Justice ,Supreme Court ,K. R. Sriram ,Judge ,Mohammad Shafiq ,Dinakaran ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...