×

சென்னையில் மார்ச். 29ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!!

சென்னை: மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சென்னை மாவட்டத்தில் 29.03.2025 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நந்தனம் அரசு கலைக் கல்லூரி (Government Arts College, Nandanam) வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

* 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்
* 20,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
* தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

கல்வித்தகுதிகள்

*8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் அனுமதி இலவசம்

மேலும் விவரங்களுக்கு

துணை இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை.

www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் Candidate log- இல் தங்களது சுய விபரங்களை முன்பதிவு செய்யவும். தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் மார்ச். 29ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Administration ,District Employment and Vocational Guidance Centre ,Nandanam Government Arts College ,Government Arts ,Chennai District ,Private Sector Employment ,Camp ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...