×

முத்துப்பேட்டையில் நாய்கள் தொல்லை ஏடிஎம் மையத்தில் படுத்து இடையூறு

முத்துப்பேட்டை, மார்ச் 20: முத்துப்பேட்டையில் ஏடிஎம் மையத்தில் நாய்கள் படுத்து இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அணைத்து பகுதிகளில் சமீப காலமாக நாய்கள் தொல்லை அதிகரித்துவருகிறது. இதனால் நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாய்கள் கடைத்தெரு மற்றும் குடியிருப்புகளின் தெருக்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும், குழந்தைகளையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது. வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து ஏற்படுகிறது. அதேபோல் அடிக்கடி டூவிலர்களில் செல்பவர்களை குறுக்கே வரும் நாய்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் நாய்களின் சிலவைகள் வெறி பிடித்து காணப்பட்டதால் ஏராளமான மாடுகள், ஆடுகளை கடித்து குதறுகிறது. அதேபோல் நோய்வாய்ப்பட்ட நாய்கள் ஏராளமானவையும் நகரில் சுற்றி திரிகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு வியாதிகளை பரப்பும் அபாயமும் உள்ளது. சமீபத்தில் கூட குழந்தைகளை நாய்கள் துரத்தி காயம் படுத்திய சம்பவமும் அதேபோல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் சீண்டிய சம்பவங்களும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லையால் முத்துப்பேட்டை மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இப்படி தொடர்ச்சியாக மக்களை அச்சுறுத்தும் நாய்களை பேரூராட்சி நிர்வாகம் இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முத்துப்பேட்டையில் நாய்கள் தொல்லை ஏடிஎம் மையத்தில் படுத்து இடையூறு appeared first on Dinakaran.

Tags : Muthuppetta ,Mutuppet ,ATM ,Thiruvarur district ,Muthuppet district ,Muthuppet ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...