×

மணிப்பூரில் மீண்டும் மோதல்: துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி

இம்பால்: மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஸோமி மற்றும் ஹமர் பழங்குடியின மக்கள் இடையே நேற்றுமுன்தினம் திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது இரு பிரிவினரும் கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். சிலர் துப்பாக்கியாலும் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் நிலைமையை போராடிகட்டுப்படுத்தினர். துப்பாக்கி சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார் என பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் மீண்டும் மோதல்: துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Clashes again in Manipur ,Imphal ,Somi ,Hamar ,Surachandpur ,Manipur ,again in ,Dinakaran ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...