- பெரிய நாகபூண்டி குளம்
- புத்தர்மாண்டி
- ஆர் கே பெட்டாயி
- பெரியநாகபூண்டி
- ஆர்.கே.பேட்டை.
- ஆர்.கே.பேட்டை.…
- தின மலர்
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டி கிராமத்தில் கோடையில் குடிநீர் வறட்சி போக்க புதர்மண்டி கிடக்கும் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை அருகே பெரியநாகபூண்டி ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களின் நீராதாரமாக விளங்கும் பெரியநாகபூண்டி காலனிக்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய குளம் உள்ளது. இக்குளம், பல ஆண்டுகளாக தூர்வாரி சீரமைக்காமல் உள்ளது. இதனால், குளம் முழுவதும் புதர்மண்டி முட்செடிகள் வளர்ந்து, குளத்தில் கோரை புற்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது.
மேலும், இக்குளத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், தண்ணீர் மாசடைந்து நிலத்தடி நீர்மட்டம் பயன்பாட்டிற்கு லாயக்கையற்ற வகையில் மாறும் அபாயம் நிலவுகிறது. இவ்வாறு, மாசடைந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர், கலெக்டர் பார்வைக்கு, கிராம மக்கள் சார்பில் பலமுறை கொண்டு சென்றும் மெத்தனமாக செயல்படுவதாக கிராமமக்கள் குற்றம் சாட்டினர். தற்போது, கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், குடிநீர் வறட்சியை போக்க தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெரிய நாகபூண்டி குளத்தை தூர்வாரி சீரமைத்து, குளத்தை சுற்றி இரும்பு வேலி அமைத்து, கிராம மக்கள் நடை பயிற்சிக்கு வசதியாக விளக்குகள், ஓய்வு எடுக்க இருக்கைகள் அமைத்து தர முன்வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
The post புதர்மண்டி காணப்படும் பெரிய நாகபூண்டி குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
