×

ஆதி திராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி மனு

திருவள்ளூர்: திருத்தணி வட்டம், சிவ்வாடா, மதுரா, என்.என்.கண்டிகை கிராமத்தில் வசிக்கும் 93 ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வீட்டு மனையற்ற ஆதிதிராவிடர் இன மக்களுக்கு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் கொடுத்த மனுவின் அடிப்படையில் திருத்தணி வட்டாட்சியர் கடந்த 2023ம் ஆண்டு பூனிமாங்காடு வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்தார். இதில் 25 குடும்பங்களை தேர்வு செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க திருத்தணி வட்டாட்சியருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரை செய்தார்.

இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளான பின்பும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து வட்டாட்சியர் உத்தரவுப்படி திருத்தணி வட்டம் சிவ்வாடா, மதுரா, என்.என்.கண்டிகை கிராமத்தில் வசித்து வரும் வீட்டுமனையற்ற 25 ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மீண்டும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் மு.பிரதாப் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

The post ஆதி திராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Adi Dravidian ,Tribal District Welfare Committee ,Neelavanathu Nilavan ,Tiruttani Taluk ,Sivvada ,Mathura, N.N. Kandigai ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...