- இப்தார்
- அமைச்சர்
- நாசர்
- ஆவடி
- ச.M.Nasser
- ரமலான்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அல்-மதீனா நண்பர்கள் குழு
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
- ஆவதி...
ஆவடி: ஆவடியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் அல்-மதினா நண்பர்கள் குழு மற்றும் மஸ்ஜிதே முஸ்தபா இணைந்து நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில், மாநகர மேயர் உதயகுமார், மாநகர பொறுப்பாளர் சண் பிரகாஷ், மண்டலக்குழு தலைவர் ராஜேந்திரன், தோழமை காட்சி நிர்வாகிகள் யுவராஜ், ஆதவன், மாமன்ற உறுப்பினர் சத்யா ரவி, பகுதி கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post ஆவடியில் இப்தார் நோன்பு திறப்பு: அமைச்சர் நாசர் பங்கேற்பு appeared first on Dinakaran.
