- பொது சாதனை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கே. சுந்தர்
- மதுராந்தகம்
- காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றிய இளைஞர் பிரிவு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- பொலம்பாக்கம்
- தொழிற்சங்க செயலாளர்
- ஏழுமலை…
- தின மலர்
மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பொலம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மாரிமுத்து, ராமமூர்த்தி, சத்தியசீலன், வடிவேல்முருகன், பழனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அப்துல் மாலிக், தலைமை கழக பேச்சாளர் சிவா, தொகுதி பொறுப்பாளர் இசை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் வரலாறு காணாத திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.
த்திட்டங்களை பிற மாநிலத்தின் முதல்வர்களும் பின்பற்றுகின்றனர், பாராட்டுகின்றனர். அதில், குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் தற்பொழுது அறிவித்துள்ள பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் ஒரு சதவீதம் பத்திரப்பதிவில் கட்டண குறைப்பு உள்ளிட்ட திட்டங்களால் மகளிர் பயன்பெற்று வருகின்றனர். அதேபோன்று செய்யூர் தொகுதியில் விரைவில் அரசு கலைக்கல்லூரி, சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும், என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனால் இந்த செய்யூர் தொகுதி மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள மதுராந்தகம் தொகுதி மக்களும் பயன்பெறுவர். ஆகவே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து 200க்கு 200 தொகுதிகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்றார். இதனைத் தொடர்ந்து 500 பெண்களுக்கு புடவை இளைஞர்களுக்கு கிரிக்கெட் கிட், சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், துணை அமைப்பாளர்கள் ஆண்டோ சிரில் ராஜ், பால்ராஜ், யுவராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைப்பாளர் புருஷோத்தமன், கவுன்சிலர்கள் ஜனனி, நாகப்பன், கிளைச் செயலாளர்கள் செந்தில், விமலா, வீரா உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
The post 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் வரலாறு காணாத திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: க.சுந்தர் எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.
