×

15,455 அடுக்குமாடி வீடுகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை மற்றும் சுற்றியுள்ள 48 திட்டப் பகுதிகளில் 15,455 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இக்குடியிருப்புகள், உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்டு, முதல்வர் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கும் வகையில் அலுவலர்கள் தொடந்து ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என துணை முதல்வர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, வாரிய செயலாளர் காளிதாஸ், தலைமை பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, லால் பகதூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 15,455 அடுக்குமாடி வீடுகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Urban Habitat Development Board ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி