×

பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தில் செல்போன் தலைமை ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்

திருப்பூர்: பிளஸ் 2 வணிகவியல் தேர்வு கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அப்போது, திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தேர்வு மையத்தில் தேர்வு அலுவலராக ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் இருந்தார். அவர் தேர்வு அறைக்குள் செல்போன் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. விசாரணையில் அவர் 3 செல்போன்களை கொண்டு சென்றதும், அதனை தேர்வு மையத்தில் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமை ஆசிரியர் தாமோதரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தில் செல்போன் தலைமை ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Plus 2 Cell Phone ,General ,Election ,Center ,Tiruppur ,Plus 2 Mercantile Exam ,Damodaran ,Uthakkuli Government Men's Secondary School ,Private Metric School ,Tiruppur Apachi Nagar ,Chief Editor ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் சாலை விபத்தில்...