×

சென்னையை அடுத்த அக்கரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது

சென்னை: சென்னையை அடுத்த அக்கரையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எழும்பூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனால் பா.ஜ.க.-வை சேர்ந்த மூத்த தலைவர்களின் இல்லங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து காவல்துறை தடையை மீறி போராட்டத்துக்கு புறப்பட்ட தமிழிசை கைது செய்யப்பட்டார். அவருடன் பாஜக தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து போரட்டத்தில் பங்கேற்க பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அண்ணாமலை புறப்பட்ட நிலையில் அக்கரையில் வைத்து காவல்துறை அவரை கைது செய்தது. தடையை மீறி போராட்டம் நடத்தச் சென்றபோது அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.

டாஸ்மாக் அலுவலகத்துக்கு வெளியே கூடிய பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

The post சென்னையை அடுத்த அக்கரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Chennai ,J. K. ,president ,Ramampur ,Tasmak ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...