×

தமிழக பட்ஜெட்டை தேமுதிக வரவேற்கிறது: பிரேமலதா பேட்டி

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நேற்று நடந்த கட்சி பிரமுகரின் இல்ல விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்து, தங்கரதம் இழுத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தேமுதிக வரவேற்கிறது. வேளாண் மற்றும் பொது பட்ஜெட்டில் மெட்ரோ திட்டம், உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, பெண்களுக்கான திட்டங்கள் நல்லவிதமாக அறிவித்துள்ளார்கள். டாஸ்மாக் குற்றச்சாட்டினை பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது. அமலாக்கத்துறை உண்மையாக ஊழல் நடந்ததா என்பதை கண்டறிந்து தெளிவுப்படுத்த வேண்டும்.
அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. தொகுதி சீரமைப்பு விவகாரத்தில் நிச்சயமாக ஒன்றிய அரசை எதிர்த்து, தமிழக அரசுடன் கைகோர்த்து, தமிழக மக்களின் உரிமைக்காக போராடுவோம். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

The post தமிழக பட்ஜெட்டை தேமுதிக வரவேற்கிறது: பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMDK ,Tamil Nadu ,Premalatha ,Palani ,General Secretary ,Premalatha Vijayakanth ,Palani, Dindigul district ,Tamil Nadu government's… ,
× RELATED சொல்லிட்டாங்க…