×

மாமன்னன் படத்தின் 2வது பாடல் வெளியானது

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜிகு ஜிகு ரயில்’ நேற்று வெளியானது.‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் வடிவேலுவின் லுக் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் கடந்த 19ம் தேதி வெளியானது.

யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியிருந்த இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘ஜிகுஜிகு ரயில்’ பாடல் நேற்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த பாடல் நேற்று
வெளியானது.

The post மாமன்னன் படத்தின் 2வது பாடல் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Udhayanidhi Stahl ,Mariselvaraj ,Mari Selvaraj ,Udhayanidhi Stalin ,Fahadh Basil ,Vadivelu ,Keerthy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால்...