×

போலீசை மிரட்டிய லாலு மகன் இடுப்பை ஆட்டி ஆடாவிட்டால் சஸ்பெண்ட் செய்து விடுவேன்: பீகாரின் ஹோலி அரசியல்

பாட்னா: ஹோலி கொண்டாட்டத்தின் போது, சீருடையில் இருந்த போலீஸ்காரை இடுப்பை ஆட்டி நடனமாட வேண்டுமெனவும், இல்லாவிட்டால் சஸ்பெண்ட் செய்து விடுவதாகவும் லாலு பிரசாத் மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் மிரட்டிய வீடியோ காட்சிகள் பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் பாட்னாவில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் மகனும் முன்னாள் ஆர்ஜேடி அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் தனது வீட்டில் கட்சி ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை கொண்டாடினார்.

அப்போது தனது தந்தையை போலவே, ஒருவருக்கொருவர் உடைகளை கிழித்துக் கொண்டு கலர் பொடி பூசும்படியான கொண்டாட்டத்தில் தேஜ் பிரதாப் ஈடுபட்டார். ஆதரவாளர்களின் உடைகளை கிழித்த அவர் வீட்டருகே தெருவில் ஸ்கூட்டர் ஓட்டியபடி, ‘‘ஹேப்பி ஹோலி பல்டி மாமா’’ என முதல்வர் நிதிஷ்குமாரை கிண்டலடிக்கும் வகையில் கத்தினார். மேலும், கொண்டாட்ட மேடையில் மைக்குடன் இருந்த தேஜ் பிரதாப் யாதவ் அங்கு பாதுகாப்பு பணிக்காக சீருடையில் வந்திருந்த போலீஸ்காரர் ஒருவரை பார்த்து, ‘இடுப்பை ஆட்டி டான்ஸ் ஆடுங்க.

இல்லாட்டி சஸ்பெண்ட் ஆக வேண்டியிருக்கும்’ என கிண்டலாக மிரட்டுவதும் அதைத் தொடர்ந்து அந்த போலீஸ்காரர் கையை உயர்த்தி லேசாக டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோக்களால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பொன்னவல்லா கூறுகையில், ‘‘தந்தையை போலவே மகன். ஆட்சியில் இருந்த போது தங்களின் தாளத்திற்கு போலீசை ஆட்டுவித்து காட்டாட்சி நடத்தியவர்கள், அதிகாரத்தில் இல்லாத போதும் அட்டூழியம் செய்கிறார்கள். இது டிரைலர். ஆர்ஜேடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு சாட்சி இது’’ என்றார்.

The post போலீசை மிரட்டிய லாலு மகன் இடுப்பை ஆட்டி ஆடாவிட்டால் சஸ்பெண்ட் செய்து விடுவேன்: பீகாரின் ஹோலி அரசியல் appeared first on Dinakaran.

Tags : Lalu Prasad ,Bihar ,Patna ,Holi ,minister ,Tej Pratap Yadav ,
× RELATED இந்தியாவில் கடந்த 2025ல் 166 புலிகள்...