×

கோவிந்தபுத்தூர் காளியம்மன் கோயிலில் மாசி மாத சிறப்பு பவுர்ணமி யாகம்

 

தா.பழூர், மார்ச் 15: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் பக்தர்கள் வேண்டும் வரங்களை வழங்கி எழுந்து அருள் பாலித்து வரும் காளியம்மன் ஆலயத்தில் மாசி மாத பவுர்ணமியை யொட்டி பூஜை மற்றும் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதையொட்டி, காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதில், காளியம்மனுக்கு பக்தர்கள் மாப்பொடி, பால், தயிர், நெய், இளநீர், கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களை வழங்கி அபிஷேகம் நடைபெற்றது. இதில், வேள்வி யாகம் நடத்தப்பட்டு புனித நீரை அம்மனுக்கு ஊற்றினர். இதனால் தங்களுக்கு சகல செளபாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். பின்னர், அம்பாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனுக்கு புனித நீர் ஊற்றும் போது ஓம் சக்தி பராசக்தி என பக்தி பரவசத்தில் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோவிந்தபுத்தூர் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

அரியலூர், தத்தனூர், கும்பகோணம், சிதம்பரம், மாயவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தை வரம் மற்றும் திருமண வரம் மற்றும் பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து வழிபாடு செய்கின்றனர். இதில் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர்.

The post கோவிந்தபுத்தூர் காளியம்மன் கோயிலில் மாசி மாத சிறப்பு பவுர்ணமி யாகம் appeared first on Dinakaran.

Tags : Masi ,Kaliamman temple ,Govindaputhur ,Tha.Pazhur ,Ariyalur district ,Masi… ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்