×

சாயர்புரம் அருகே வருஷாபிஷேக விழா

ஏரல், மார்ச் 15: சாயர்புரம் அருகேயுள்ள நந்தகோபாலபுரம் நாராயணசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு ரத்தின விநாயகர், நாராயண சுவாமி, முத்துமாலை அம்மன் கோயில் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் மூலஸ்தானத்தில் ரத்தின விநாயகர், நாராயண சுவாமி மற்றும் முத்துமாலை அம்மனுக்கு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நந்தகோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவர் பாலமுருகன் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

The post சாயர்புரம் அருகே வருஷாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Sayarpuram ,Varsha Abisheka ceremony ,Nandakopalapuram Narayanaswamy Temple ,Yakashala ,Ratna Vinayagar ,Narayana Swami ,Muthumalai Amman Temple ,Diyaradhan ,Varsha Abhishek Festival ,
× RELATED விவசாயிகள் பயிற்சி முகாம்