×

மூத்த குடிமக்களின் பராமரிப்பிற்காக 10 மாநகரங்களில்; ரூ.10 கோடியில் 25 அன்புச்சோலை மையங்கள்

சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது: மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கென மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகரங்களில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்.

இந்த பகல்நேர் பாதுகாப்பு மையங்களில் முதியவர்கள் தோழமை உணர்வுடனும் பயனுள்ள பணிகளிலும் ஈடுபடலாம். பகல்நேர பராமரிப்பு உதவி, அத்தியாவசிய மருத்துவ பராமரிப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் துணையுடன் இந்த அன்புச்சோலைகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post மூத்த குடிமக்களின் பராமரிப்பிற்காக 10 மாநகரங்களில்; ரூ.10 கோடியில் 25 அன்புச்சோலை மையங்கள் appeared first on Dinakaran.

Tags : Anbucholai ,Finance Minister ,Thangam Thennarasu ,Legislative Assembly ,Madurai ,Coimbatore ,Trichy ,Salem ,Tiruppur ,Erode ,Thoothukudi ,Vellore ,Thanjavur ,Dindigul… ,Anbucholai Centers ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...