×

நிர்வாகிகள் பதவியேற்பு

சிவகங்கை, மார்ச் 14: சிவகங்கையில் தமிழ்ச்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவர் அன்புத்துரை தலைமை வகித்தார். தமிழ்ச்செம்மல் பகீரத நாச்சியப்பன், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் ஜவகர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் வரவேற்றார். செயலாளர் மாலா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

பொருளாளர் பால்ராஜ் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். 2025ம் ஆண்டிற்கான தமிழ்ச் சங்கத் தலைவராக முருகானந்தம், செயலாளராக பாண்டியராஜன், பொருளாளராக ஜெயச்சந்திரன், துணைத் தலைவராக முத்துகிருஷ்ணன், துணைச் செயலாளராக இந்திரா காந்தி, நிர்வாகக் குழு உறுப்பினராக குமார், முத்துப்பாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோர் பதவி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நிர்வாகிகள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Tamil Sangha New Executives Inauguration Ceremony ,Tamil Sangh ,President ,Anbutura ,Tamil ,Semmal Bakeeratha Nachiyappan ,National Good Lashir Kannapan ,Tamil Sangha Institute ,Jawagar Krishnan ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...