×

கூட்டுறவு துறை குறைதீர் முகாம்

ராமநாதபுரம், மார்ச் 14:ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள், துறை பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில், பணியாளர் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மண்டல இணைப்பதிவாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், செயலாட்சியர் தலைமையில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பணியாளர்கள் பணி தொடர்பாகவும், பணியின்போதும் அல்லது வேறு வகையில் ஏற்படும் குறைகள் தொடர்பாகவும் மனுக்கள் அளிக்கலாம். இவ்வாறு பெறப்படும் மனுக்கள் ஆர்.சி.எஸ்.போர்டல் மற்றும் ஈ.ஆபிஸ் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டு தீர்வு காணப்படும். இந்த தகவலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்தார்.

The post கூட்டுறவு துறை குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Cooperative Department Grievance Redressal Camp ,Ramanathapuram ,District Central ,Cooperative ,Bank ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி