×

அன்புமணிக்கு எம்பி பதவி ராமதாஸ் விரக்தி பேச்சு

திண்டிவனம்: அன்புமணிக்கு எம்பி பதவி குறித்த கேள்விக்கு ராமதாஸ் விரக்தியுடன் பதிலளித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நியாய விலைக் கடைகளில் ராகி வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப அட்டைதாரருக்கு ராகி வழங்கும் திட்டம் முக்கியமான திட்டம். ராகி கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரம் உயர்த்தவும், ராகியை உழவர்களிடம் நேரடியாக சென்று கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். தமிழர்கள் நாகரிகமானவர்கள் என்பது குறித்த புத்தகங்களை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா பதவிக்காக எந்த கட்சியிடம் பேசுவீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘திமுகவிடம் கோரிக்கை வைக்க மாட்டோம். வேறு யாரிடம் வைக்கலாம் என நீங்களே சொல்லுங்கள்’ என்று ராமதாஸ் பதில் அளித்தார்.

The post அன்புமணிக்கு எம்பி பதவி ராமதாஸ் விரக்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Anbumani ,Tindivanam ,PMK ,Tailapuram ,Villupuram district ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...