×

குலசேகரன்பட்டினம் கோயிலில் முத்தாரம்மன் சப்பர வீதியுலா

 

உடன்குடி, மார்ச் 13: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாசி மாத கடைசி செவ்வாய்க்கிழமை முன்னிட்டு அம்மன் சப்பர வீதியுலா நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 2 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து முத்தாரம்மன் சப்பரத்தில் வீதியுலா வந்து காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

 

The post குலசேகரன்பட்டினம் கோயிலில் முத்தாரம்மன் சப்பர வீதியுலா appeared first on Dinakaran.

Tags : Mutharamman ,Sappara Veedhiyula ,Kulasekaranpattinam Temple ,Udangudi ,Amman Sappara Veedhiyula ,Kulasekaranpattinam Mutharamman Temple ,Masi ,Kalasanthi Pooja ,Mutharamman Sappara Veedhiyula ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்