திருமங்கலம், மார்ச் 13: திருமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சோனை. இவர் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று பகல் நேரத்தில் இவருக்கு சொந்தமான பசுமாடு, பாண்டியன் நகர் சுடுகாடு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த பகுதியில் மின்சார கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. அந்த மின்கம்பியை மிதித்த மாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. பசுமாடு உயிரிழந்ததை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கம்பி இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
The post மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு appeared first on Dinakaran.
