×

முதலமைச்சர் ஸ்டாலின் நாகை மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவிக்கு வாழ்த்து

 

வேதாரண்யம், மார்ச் 12: நாகை மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவி, தேத்தாகுடி வடக்கு பகுதியை சேர்ந்த மோகனா தசமணி, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது மகளிர் தொண்டர் அணி தலைவி மோகனா தசமணி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கி, மகிழ்ந்தார். இதனை தொடர்டந்து நாகை மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும், நாகை மாவட்ட திமுக செயலாளாருமான கெளதமன் வழிகாட்டுதலின் பேரில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

The post முதலமைச்சர் ஸ்டாலின் நாகை மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவிக்கு வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Stalin ,Naga District Women's Volunteers' Association ,Vedaranyam ,Mohana Dasamani ,Dethagudi North ,DMK ,President ,Tamil Nadu ,M.K. Stalin ,Arivalayam ,Chennai ,International Women's Day ,Dinakaran ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...