×

எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. திரைப்பட இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதற்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குனர் ஷங்கர் ஐகோர்ட்டில் மனு அளித்தார். ஷங்கருக்கு எதிராக தீர்ப்பளிக்காத நிலையில், இறுதி முடிவை அறியாமல் ED நடவடிக்கை எடுத்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். ஷங்கர் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 21-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

The post எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Enforcement Directorate ,Shankar ,Chennai ,High Court ,Enthiran ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...