×

அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை என்பதை ஒருத்தரால் முடிவு செய்ய முடியாது: எடப்பாடிக்கு சசிகலா பதில்

ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன் குடிக்காடு கிராமத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. இந்த இயக்கம் என்பது தலைவர் ஆரம்பித்தது. மக்களுக்காக ஆரம்பித்தது. நல்ல ஆட்சி 2026ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கலாம். வெளியில் சில பேர் நினைக்கலாம், அதிமுகவை சுக்கு நூறாக உடைத்து விடலாம். எப்படி என்றால் கடலில் இருக்கும் தண்ணீரை பக்கெட்டில் எடுத்து வெளியேற்றிவிடுவேன் என்பது போல் உள்ளது.

அதிமுக என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. 2026ல் எல்லோரும் ஒன்றினைந்து நல்லபடியாக ஆட்சி அமைத்து, அது தலைவர் ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பிடித்த ஆட்சியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அனைவரும் ஒன்றினைய வாய்ப்பில்லை என எடப்பாடி கூறி வருகிறார் என்ற கேள்விக்கு, இது ஒருத்தர் முடிவு செய்யும் விஷயம் இல்லை. எங்கள் சட்டதிட்ட விதிகள்படி, எங்கள் அடிமட்ட தொண்டன் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் இந்த கட்சியின் சட்ட விதிப்படி நடக்கும். அதை நாங்கள் நல்லபடியா செய்வோம் என்றார்.

The post அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை என்பதை ஒருத்தரால் முடிவு செய்ய முடியாது: எடப்பாடிக்கு சசிகலா பதில் appeared first on Dinakaran.

Tags : Sasicala ,Etapadadi ,Oratanadu ,Sasikala ,minister ,Vaithilinga ,Telangan ,Oratanadu, Tanjavur district ,Edapadi ,
× RELATED இளைஞரணி மாநிலத் தலைவர் அமர்நாத்...