×

சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறு: ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம்

சென்னை: சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு எத்தியார்ட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 168 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்கியதும் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக இழுவை வண்டிகள் வந்து ஓடுபாதையில் பழுதடைந்து நின்ற எத்தியார்ட் ஏர்லைன்ஸ் விமானத்தை இழுத்துக் கொண்டு வந்து, விமான நிலையத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தியது. இதனால் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, பொறியாளர் குழுவினர், விமானத்தை சரி செய்ய முயன்று வருகின்றனர். விமானக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறு: ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Abu Dhabi ,Chennai ,Etihad Airlines ,Abu Dhabi, United Arab Emirates ,Chennai… ,
× RELATED வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல்...