×

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பெற்றது ஜெய்பீம்: சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி

லாஸ்ஏஞ்சல்: உலகின் மிகப்பெரிய திரைப்படம் விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த படம், ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கினார். அண்மையில் ஆஸ்கர் அமைப்பு இந்த படத்துக்கு சிறந்த கவுரவத்தை அளித்தது. ஆஸ்கர் அமைப்பு தன்னுடைய யூடியூப் சேனலில் ஜெய்பீம் படத்தின் காட்சிகளை பகிர்ந்தது. இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி, இந்திய சினிமாவுக்கே கிடைத்த கவுரவமாக கருதப்படுவதாக திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், ஜெய்பீம் திரைப்படம் 94-வது ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்ட தகுதிப் பட்டியலில் 276 திரைப்படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், மோகன்லால் நடிப்பில் வெளியான ’மரைக்காயர்’ திரைப்படமும் தேர்வாகியுள்ளது. பழங்குடியின பெண்ணின் சட்டப் போராட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம், நிஜ சம்பவம் என்பதகுறிப்பிடத்தக்கது. முன்னதாக, சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த ஆஸ்கர் தேர்வு பட்டியலில் இருந்த நிலையில் இம்முறை ‘ஜெய்பீம்’ தேர்வாகியிருப்பதால் சூர்யா ரசிகர்கள் இணையத்தில் இதனைக் கொண்டாடி வருகின்றனர்….

The post ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பெற்றது ஜெய்பீம்: சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Jaibheem ,Suriya ,Los Angeles ,Jaybeam ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் எதிர்காலம் இந்திய...